நாளுக்கு நாள் உணவுகளில் கலப்படங்கள் அதிகரித்து வருகின்றது.

இதனை வாங்கி சாப்பிடுவதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் ஏற்படுகின்றது.

கருப்பு மிளகு என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா.

குறிப்பாக கருப்பு மிளகில் பப்பாளி விதைகள் கலக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதனை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து பார்க்கலாம்.

செயல்முறை 1

ஒரு தெளிவான கண்ணாடி கிளாசில் தண்ணீர் நிரப்பவும். சிறிதளவு கருப்பு மிளகை அவற்றில் போடவும் எடை காரணமாக கலப்படமில்லாத மிளகு தண்ணீரின் மூழ்கிவிடும்.

பப்பாளி விதைகள் எனில் அவை மிதக்கும்.

செயல்முறை 2

ஒரு சிறிய அளவு கருப்பு மிளகை எடுத்து ஒரு மேஜையில் வைக்கவும். உங்கள் விரலால் மிளகை அழுத்தி பார்க்கவும்.

கலப்படமில்லாத மிளகுகள் எளிதில் உடைந்து போகாது கலப்படம் செய்யப்பட்ட மிளகுகள் எளிதில் உடைந்துவிடும்.

இனி யாரும் ஏமாராதீர்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை கண்டுப்பிடித்து தவிர்த்து விடுங்கள்.