கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் இந்தியா முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 22 தொற்று பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் மும்பை மக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல் கூறியதாவது:-


ஒமிக்ரான் வைரஸால் ஊரடங்கு வரும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. மக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கட்டாயம் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள வேண்டும்.  உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட இடங்களில் கடுமையான கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இக்பால் சிங் சாஹல் எச்சரித்துள்ளார்.