தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில், இந்திய சந்தையிலும் சற்று சரிவில் காணப்படுகின்றது.

இந்த நிலையில், இந்தியாவின் சென்னையில் இன்று (டிசம்பர் 6) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,508 ஆகக் குறைந்துள்ளது.

நேற்று இதன் விலை 4,511 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 24 ரூபாய் குறைந்து 36,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,651 ஆகவும், பெங்களூ-ருவில் ரூ.4,476 ஆகவும், ஹைதரா-பாத்தில் ரூ.4,476 ஆகவும், கேரளா-வில் ரூ.4,478 ஆகவும், டெல்லியில் ரூ.4,691 ஆகவும், கொல்க-த்தாவில் ரூ.4,686 ஆகவும், ஒசூரில் ரூ.4,512 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,517 ஆகவும் இருக்கிறது.

இதோப்போல், இலங்கையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,332.90 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலையானது 43,329 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது