பளை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (11) முற்பகல் கண்ணிவெடி பிரிவினர் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது சீருடைகள், பழைய வெடிபொருட்கள் மற்றும் மனித எச்சங்கள் என்பன இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நேற்று பார்வையிட்ட பின்னர் மேலதிக அகழ்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தனர்.

அதற்கு அமைவாக இன்றையதினம் கிளிநொச்சி நீதவான் முன்நிலையில் அகழ்வுபணிகள் இடம்பெற்றன.

இவ் அகழ்வு பணிகளின் போது விடுதலைப்புலிகளின் சீருடை இலக்கத்தகடு என்பன இனங்காணப்பட்டன தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.