கொழும்பு மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், சுமார் 420,000 ரூபாய் பெறுமதியான முச்சக்கர வண்டியை திருடியக் குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு 14, பேலியகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 29, 30, 38 மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது திருடப்பட்ட முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவர்களிடமிருந்து 8 மின்களம, தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.