கடந்த பண்டிகை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது குறைந்துள்ளது.

750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டை ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 26 ரூபாவாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.