நாட்டு மக்களின் வாழ்வை பிரகாசமடைய செய்யும் விதமான பாரிய அபிவிருத்திப் புரட்சி 2022 ஆம் ஆண்டு செயற்படுத்தப்படும் என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சரின் ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து வருடங்களாக அப்பாவி மக்களுக்கு உதவித் தொகையை கூட வழங்க முடியாதவர்கள் மக்கள் சார்பாக முதலைக் கண்ணீர் வடித்து ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.