LPL T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் கெண்டி வெரியர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கிலேடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்றது.
கோல் கிலேடியேட்டர்ஸ் அணி சார்பாக குசல் மென்டிஸ் 44 ஓட்டங்களையும், சமித் பட்டேல் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
கெண்டி வெரியர்ஸ் சார்பில் கமிந்து மென்டிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கெண்டி வெரியர்ஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்கனை அடித்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
கெண்டி வெரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக ரவி பெப்பார 34 ஓட்டங்களையும், டெம் மூர்ஸ் 28 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இந்த தொடரில் இதுவரையில் கெண்டி வெரியர்ஸ் அணி வெற்றி பெற்ற முதல் போட்டி இதுவாகும்.