இந்திய முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் 14 பேருடன் சூலூர் விமானப் படை தளத்திலிருந்து இன்று பகல் 11 மணியளவில் வெலிங்கடன் சென்ற விமானம் குன்னூர் அருகே 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய விபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்நிலை குறித்து முதற்கட்டமாக எந்தத் தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

விபத்தில் சிக்கிய 14 பேரில் 10 பேர் பலியாகிவிட்டதாகவும், 4 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டதாகவும் சம்பவ இடத்திலிருந்து தகவல்கள் கிடைத்தன.

பிறகு, 14 பேரில் 13 பேரும் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில், ஹெலிகாப்டரில் சென்ற விபின் ராவத் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப் படை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது