முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

 

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரின் சடலங்களை தேடும் நடவடிக்கை அப்பகுதி கடற்றொழிலாளர்கள், பொலிஸார் ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்கரை பகுதிக்கு  யுவதி ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் வாகனத்தில் வந்து,  கடலில் குளித்தப்போது ஆண்கள் மூவரும் கடலில் மூழ்கி காணாமல் போனார்கள்.

வவுனியா- மதகுவைத்தகுளம் பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய மனோகரன் தனுசன், தோணிக்கல் வவுனியாவினை சேர்ந்த 26 வயதுடைய விஜயகுமாரன் தர்சன் மற்றும் வவுனியா- மதவுவைச்சகுளத்தினை சேர்ந்த 26 வயதுடைய சிவலிங்கம் சகிலன் ஆகியோரே கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்