பயறை விட முளைக்கட்டிய பயறில் அதிக நன்மைகள் உள்ளது.

பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்கும் போது முளைக்கும் நிலையில் இருக்கும் பயிரை முளைக்கட்டிய பயிர் என்று அழைக்கின்றோம்.

 முளைக்கட்டுவதனால் உயிர்ச்சத்து கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது.

இந்த முளைக்கட்டிய பயிரை எப்படியெல்லாம் சமைத்து ஆரோக்கியமாக சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆம்லெட்

முட்டையை அடித்து ஊற்றி அதில் சிறிது நறுக்கிய காய்கறிகள், முளைப்பயிர், வறுத்து துண்டாக்கிய முந்திரி ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

ஸ்மூத்திஸ்

முளைகட்டிய பயிறுடன் ப்ரோக்கோலியும் சேர்த்து ஸ்மூத்தி போன்று செய்து சாப்பிடலாம்.  குழந்தைகளுக்கு இது போன்ற ஸ்மூத்தி மிகவும் ஆரோக்கியமானது.  

பேல் பூரி

இனி பேல் பூரி செய்யும்போது அதில் பட்டாணி, எலுமிச்சை சாறு மற்றும் மற்ற மசாலைக்களை சேர்ப்பதுடன் முளைப்பயிரையும் சேர்த்து விடுங்கள். இது உங்களுக்கு சிறந்த ஸ்னாக்காக இருக்கும்.

இட்லி

சத்தான உணவுகளில் ஒன்று இட்லி. இதில் முளைப்பயிரை சேர்ப்பதால் அதிக நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். முளைப்பயிரை நன்றாக அரைத்து மாவில் சேர்த்து இட்லி செய்து சாப்பிடலாம். மிக குறைந்த கலோரி உள்ள ரெசிபி வகையை இது சேர்ந்தது. எனவே உடலுக்கு மிகவும் நல்லது.