தேங்காயை முளைகட்ட வைத்தால் அதற்குள்ளே முளைக்கும் தேங்காய்ப் பூவிலும் ஏராளமான மருத்துவப் பயன்கள் இருக்கின்றன.

நன்கு முற்றிய தேங்காயை ஈரமான சாக்குப் பையைப் போட்டு மூடிவிட்டு, தினமும் அதன்மேலே தினமும் தண்ணீரை தெளித்து தெளித்து விடவேண்டும். ஒரு வாரத்திற்குள் தேங்காய்க்குள் பூ விழுந்துவிடும்.

தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அந்த ஊட்டச்சத்துக்களின் மூலக்கூறுகள் யாவும் நம் உடலில் தோன்றுகின்ற பல அதிதீவிர நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கின்றது.

  1. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தேங்காய் பூ மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.
  2. இந்த தேங்காய்ப் பூ கொழுப்புகளை உடலில் சேரவிடாமல் கரைத்து வெளியேற்றி உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும். புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய சக்தி இந்த தேங்காய் பூவுக்கு உண்டு
  3. . புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸை உடலில் இருந்து வெளியேற்றிப் புற்றுநோய் வராமல் தடுக்கும் வேலையை இந்த தேங்காய்ப்பூ செய்கிறது.
  4. தைராய்டால் உடலில் உடல் பருமன், நீரிழிவு, பிசிஓஎஸ் என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே குணமாகும்.
  5. இதய வால்வுகளில் படிகின்ற கொழுப்புகளைக் கரைத்து, உடலில் கொழுப்புகள் தேங்காமல் பாதுகாக்கும். தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்ற ஆற்றல் இருக்கிறது.
  6. இது இன்சுலின் சுரப்பை முறைப்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
  7. தேங்காய்ப் பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உங்களுடைய ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு பிரச்சினையைத் தீர்க்க இந்த தேங்காய்ப்பூ உதவுகிறது.