எம்மில் பலருக்கும் முகம் அழகாக இருந்தாலும்  முழங்கால் மற்றும் முழங்கை பகுதிகள் கருமையாக இருக்கும்.

இது உங்களை பலர் முன்பு தனித்துவம் மிக்கவராக காட்டாது.

அசிங்கமாக இருக்கும் கருமையை போக்க இந்த பொருட்களில் ஒன்றை பயன்படுத்துங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றினை முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் கருமையைப் போக வைக்கும்.

தயிர்

பொதுவாக தயிருக்கு சரும கருமையைப் போக்கும் திறன் உள்ளது. தயிரை முழங்கை, முழங்கால் பகுதியில் தடவி குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ, விரைவில் அப்பகுதியில் உள்ள கருமை நீங்கி வெள்ளையாகும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் ஒரு துண்டை முழங்கை மற்றும் முழங்காலில் சிறிது நேரம் தேய்த்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், கருமையை நீக்கும் மற்றும் அதில் உள்ள நீர்ச்சத்து, சரும வறட்சியைத் தடுக்கும்.