மூன்று பேரை அமைச்சரவையில் இருந்து நீக்க பசில் ராஜபக்ஸ திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பசில் ராஜபக்ச அமெரிக்கா பயணிப்பதற்கு முன்னர் இது தொடர்பான யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இவர்கள் மூவரையும் வைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதெனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளாரென அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2022 ஜனவரி முற்பகுதியில் அமைச்சரவை மற்றும் அரச நிறுவனங்களின் பிரதான பதவிகளில் மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போதே மேற்படி மூவரையும் நீக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.