கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 377 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 44 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 570,672 பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114,555ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.