மே 18 அன்று உயிரிழந்த உறவுகளை நினைவேந்தியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 தமிழர்கள் இன்று பிணையிலே விடுவிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் வாழைச்சேனை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் பிணைக்கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த ஏழு மாதங்களிற்கு மேலாக மேற்கொண்ட சட்டப்போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி எனவும் இந்த பொய்யான வழக்கை முறியடிக்கும் வரை தாம் தொடர்ந்து போராடுவோம் எனவும் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

இவ்வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் சட்டத்தரணிகளான சுகாஸ், ஜெயசிங்கம், றம்சி, றிபான் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.