இன்று மாலை, மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகியாள்ளது.

 

குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து கல்லுண்டாய் வீதியூடாக சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி கல்லுண்டாய் வைரவர் கோவிலடியில் திரும்பும் போதே இந்த இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்