யாழ் பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான பரராஜசிங்கம் சுஜீபன்  பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூலூடாக முனைகிறார் என தேரர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

தேரர்  நடாத்திய ஊடக சந்திப்பு குறித்தும் புலம்பெயர் நாட்டை சேர்ந்த நபருக்கு எதிராக செய்தி   வெளியிட்டதன் விளைவாகவுமே  குறித்த தேரர் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தியமை தொடர்பாகவும் பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான ப.சுஜீபன் கடந்த 29.06.2021 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணையகத்திற்கு விரிவான கடிதம் ஒன்றினை வழங்கி இருந்தார்.

இந் நிலையில் கடந்த 13.12.2021 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இலக்கம்- Qகியூ ஜி 6961 என்னும் முச்சக்கர வண்டியில் வந்து குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்று கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.