யாழ்.பல்கலை பணியாளர்களுக்கு 3வது தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை ஆரம்பமானது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கான மூன்றாவது கொரோனா தடுப்பூசி ஏற்றல் இன்று காலை ஆரம்பமாகியது.

கடந்த ஜூன் மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் முதலாவது சினோபாஃர்ம் தடுப்பூசியையும், ஜூலை மாதம் 07 ஆம் இரண்டாவது சினோபாஃர்ம் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்ட பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஃசர் – பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.