இயேசு பாலனின் பிறப்பான நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள இயேசு பாலனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர் அவர்களினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு யேசு பாலனின் பிற்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.