இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜாவிற்கும் ரியாசுதீன் ஷேக் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனையடுத்து கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் ரியாசுதீன் ஷேக் குறித்து சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது.

அடிப்படையில் ஆடியோ இன்ஜினியரான ரியாசுதீன் திரைப்படங்களில் ஒலி வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நிறைய படங்களில் அவர் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இருவரது நிச்சயதார்த்தமும் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.