அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்க சுகுமார் இயக்கத்தில் கடந்த வாரம் ஐந்து மொழிகளில் வெளியான படம் ‘புஷ்பா’. இப்படம் வெளியான மூன்றே நாட்களில் லாபக்கணக்கில் நுழைந்துள்ளது.

இப்படத்தின் மொத்த வியாபாரம் 150 கோடி வரை நடந்துள்ளது. அத்தொகையைக் கடந்து விட்டால் இப்படம் லாபத்தில் நுழைந்துவிடும். வெளியான மூன்று நாட்களிலேயே 173 கோடி ரூபாயை வசூலித்து இப்படம் லாபக்கணக்கில் நுழைந்துவிட்டது.

பல ஏரியாக்களில் இப்படம் ‘பாகுபலி 2’ படம் அல்லாத சாதனையை வசூலில் படைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தமிழில் வெற்றி பெறவேண்டும் என்று எதிர்பார்த்த அல்லு அர்ஜுனின் ஆசை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.

ஹிந்தியில் மூன்று நாட்களில் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அங்கு படத்திற்கான விளம்பரம் மிகக் குறைவு. இருப்பினம் இந்த வசூலே படத்திற்கு எதிர்பாராதது என்கிறார்கள்.

தமிழிலும் கூட இப்படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை. படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியைக் கூட படம் வெளியாகி இத்தனை நாட்களில் போடவேயில்லை. இதையெல்லாம் சரி செய்திருந்தால் இப்படம் இன்னும் அதிகமான வசூலை பெற்றிருக்கும் என டோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள்.