லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம், சுமார் 20 பில்லியன் ரூபா ஈவுத்தொகை காணப்படுகின்றமையால், எரிவாயுவுடன் தொடர்புடைய விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு, நிவாரணம் செலுத்தும் இயலுமை உள்ளதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அனில் கொஸ்வத்த தெரிவித்துள்ளார்
அத்துடன் கடந்த காலங்களில் எரிவாயுவுடன் தொடர்புடைய அனர்த்தங்களின் போது, இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் இன்றைய தினமும் பதிவாகின.
அத்துடன், எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீப்பரவலில் பன்னல – பள்ளேகம பகுதியில் உள்ள கோழி பண்ணையில் சுமார் 3,000 கோழிகள் தீக்கிரையாகின.
இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த தீப்பரவல் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்றும் பல பகுதிகளில் மக்கள் எரிவாயு இன்மையால் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.