வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப்த பீல்ட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளமை தவறான தீர்மானமாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை கம்யூனிச கட்சியின் பொதுச்செயலாளர் டி.யு குணசேகரவை வடமேல் மாகாண ஆளுநராக நியமித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை போன்று விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்ட பாதீட்டை எனது அரசியல் வரலாற்றில் காணவில்லை.வரவு-செலவு திட்டம் மீது ஆளும் தரப்பின் உறுப்பினர்களும்,எதிர்தரப்பின் உறுப்பினர்களும் பல விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

சமூகத்தின் மத்தியில் பல பிரச்சினைகள் தற்போது தோற்றம் பெற்றுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பிரதான பிரச்சினையாகவுள்ளது. மக்கள் அரசியல்வாதிகளை பார்த்து பைத்தியம் என்று விழிக்கும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இனி வரும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து ஆழ்ந்து சிந்தித்து வருகிறேன் என்றும் அவர் கூறினார்.