வடகொரியாவில் 14 வயதுடைய மாணவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட தென்கொரிய மொழிப் படத்தை பார்த்தமைக்காக, 14 வயதுடைய மாணவனுக்கு இவ்வாறான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

வட கொரியாவில் சமூக ஊடகங்கள் பாவனையில் இல்லை என்பதுடன், அரச ஊடகங்களைத் தவிர தனியார் ஊடகங்கள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் சமீபத்தில் ஸ்குவிட் கேம் (Squid Game) வெப் சீரிசை பரப்பியவருக்கு மரண தண்டனையும் அதனைப் பார்த்தவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.