2021 ஆண்டின் சிறந்த ரி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) இந்த விருதுக்கு மொஹமட் ரிஸ்வான், மிடசல் மார்ஷ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

உலக ரி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.