அத்தனகல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த மூவர், 40 இலட்சம் ரூபா மற்றும் கெப் ரக வாகனமொன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட கெப் ரக வாகனம் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், தப்பிச் சென்ற சந்தேக நபர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.