காரில் சென்று கொண்டிருந்த குழந்தை பழுதான ஆட்டோவில் வலியில் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவி செய்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக சிறுகுழந்தைகள் கடவுளுக்கு நிகராக பெரியவர்கள் கூறுவார்கள். இங்கு நடைபெற்றுள்ள சம்பவம் காண்பவர்களின் மனதினை நெகிழ வைத்துள்ளது.

ஆம் சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த ஆட்டோவிற்குள் வலியால் கர்ப்பிணி பெண் துடிக்க, ஆட்டோ சாரதி மற்ற வாகனங்களிடம் உதவிகேட்டு சாலையில் நிற்கின்றார்.

எந்த வாகனமும் நிற்காமல் சென்ற நிலையில், அத்தருணத்தில் நிற்காமல் சென்ற கார் பின்னோக்கி திரும்பி வந்துள்ளது. உள்ளே இருந்த குழந்தை வெளியே இறங்கி பார்த்து கர்ப்பிணி பெண்ணை கவனிக்கும் விதமும், உதவி செய்வதற்கு தனது காரில் ஏற்றிச் சென்றதையும் காணொளியில் காணலாம்.