வவுனியா பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள், பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை  இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

பம்பைமடுமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பிரதான வாயிலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளதாவது, “நீண்டகாலமாக 107 வீத சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றோம்.

ஆகவே அரசாங்கம், எங்களது நிலைமைகளை உணர்ந்து கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கு மற்றும் 107 வீத சம்பள அதிகரிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்து, உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.