மோட்டார் வாகன பதிவு சான்றிதழை போலியாக தயாரித்து வாடகை அடிப்படையில் பெறப்பட்ட காரை 5,750,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் நேற்று (27) மாத்தறை கொடகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது சந்தேக நபர் முன்வைத்த தேசிய அடையாள அட்டையும் போலியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (28) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.