கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது.

கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்று மாலை இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இன்றையதினம் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.