விமானங்களில் பயணம் செய்வது என்பது மிகவும் சுவாரஷ்யமான அனுபவம்.

உலகில் உள்ள எல்லா விமானங்களையும் கட்டாயம் 2 விமானிகளுடன் தான் இயக்கப்படவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது.

அதன்படி விமானங்களில் எப்பொழுதும் தலைமை பைலட் மற்றும் துணை பைலட் ஆகிய இருவர் இருப்பார்கள்.

இது பலருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் தெரியாத சுவாரஸ்யமான விடயம் குறித்து பார்க்கலாம்.

விமான பயணத்தின் போது 2 விமானிகள் இருந்தால் அவர்களுக்கு இரண்டு வேறு வேறு உணவுகள் தான் வழங்கப்படும்.

ஒரே மாதிரியான உணவு இரண்டு பேருக்கு வழங்கப்படாது. அதற்கு ஒரு சிறச்த எடுத்து காட்டு 1984ம் ஆண்டு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம். கார்கோர்டு சூப்பர்சோனிக் ரக விமானம் ஒன்று லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு 120 பயணிகளுடன் கிளம்பியது. இந்த விமானத்தில் வழங்கப்பட்ட உணவு விஷத்தன்மையாகிவிட்டது.

கெட்டு போன உணவு தவறுதலாக பரிமாறப்பட்டுவிட்டது.

இதனால் பயணத்தின் போதே பலருக்கு வாந்தி, பேதி மயக்கம் போன்ற விஷயங்கள் நடந்தது.

பயணிகளில் ஒருவர் இதனால் மரணித்தேவிட்டார். இதே உணவு தான் விமானிகளுக்கும் வழங்கப்பட்டது.

அதன் பின் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு வேறு விமானிகளை கொண்டு இயக்கப்பட்டது.

இப்படியான பிரச்சனைகள் விமானங்களில் ஏற்பட்டால் எதிர்காலத்தில் இது விமான விபத்திற்கே வழி வகுக்கும் என்பதால் விமானிகளுக்கு ஒரே மாதிரியான உணவுகள் வழங்கப்படுவதில்லை.

ஒருவேளை உணவு விஷதன்மையுடையதாக இருந்தாலும், மற்றவர் அதனால் பாதிப்படையமாட்டார்.