யாழ்.தொல்புரத்தில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை- தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (புதன்கிழமை) குறித்த சிறுவன், தனது வீட்டின் மேல் தளத்தில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டு இருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.