ஷிராஸ் யூனுஸ் எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக செயற்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு விடயங்கள் தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இணைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

ஷிராஸ் யூனுஸ் எனும் குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராகவும், பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும் குறித்த நபர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையினை கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்