திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘ஹரக் கட்டா’ என்ற மிதிகம நதுன் சிந்தக்கவுடன் தொடர்புடைய ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை – திஹகொட பகுதியில் காவல்துறை விசேட அதிரடி படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிடம் இருந்து 8 கிலோகிராமுக்கும் அதிக கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் திஹகொட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.