ஹிக்கடுவை – மில்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரொஷான் டி சில்வா எனப்படும் குடு ரொஷான் என்பவரே நேற்றிரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நண்பர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் ஹிக்கடுவைக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய  மாகந்துரே மதுஷின் நெருங்கிய நண்பர் என்பதுடன், கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.