மலர்ந்திருக்கும் புத்தாண்டு, துன்பங்கள் அகன்று இன்பங்களைச் சேர்க்க நாமும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
2021ஆம் ஆண்டு மலர்ந்தபோது, கொவிட் தொற்று அபாயம் மேலிட்டிருந்தது.
மக்கள் அச்சத்திடனுடன், 2021ஆம் ஆண்டை வரவேற்றத்’ தலைப்பட்டனர்.
ஆனால் 2021ஆம் ஆண்டு எம்மிடமிருந்து பிரிந்து சென்றபோது, கொவிட் தொற்று என்னும் பேரச்சத்தை
தன்னமைபிக்கையுடன் தோற்கடிக்கலாம் என்ற உத்வேகத்தை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.
விஞ்ஞான உலகு கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகளை அறிமுகம் செய்து எமது தன்னம்பிக்கைகயை வளர்த்துச் சென்றுள’ளது.
இந்த உத்வேகத்து;டன், நாம் இப் புத்தாண்டை வரவேற்று நிற்கின்றோம்.
எமது இணையத்தளத்தின் உரிமையாளர், செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் மற்றும் பேரன்பு மிக்க வாசகர்கள் அனைவரிற்கும் எமது வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவிக்கும் நாம். புதுவருடத்தில் புதிய மாற்றங்களுடன் எமது இணையத்தளம் பயணிக்கவுள்ள நிலையில், உங்கள்
பேராதரவை மென்மேலும் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.