ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது. அந்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்படும். இதேபோல் ரஷ்யா தரப்பில் உக்ரைனுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும்.
உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியதுடன், ‘உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.