பெங்களூருவில் 21 வயது சின்னத்திரை நடிகை கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்துள்ளார்.
சேதனா ராஜ் 21 வயது கன்னட சின்னத்திரை நடிகை. கீதா, தோரிசாணி, ஒலவினா நில்தானா ஆகிய சீரியலில் நடித்துள்ளார். ஹவயாமி எனும் கன்னட படத்திலும் நடித்துள்ளார்.
செதனா ராஜின் தந்தை கோவிந்த ராஜ் கூரியதவாது : பெற்றோர்களது சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் தகுந்த உபகரணங்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவமனையின் அஜாக்கிரதையாலே எனது மகள் உயிரிழந்துள்ளார்.
சேதனா ராஜின் தாயர், “எனது மகள் ஆரோக்கியமானவர். எந்த நோயும் இல்லாதவர். அவளுக்கு மார்பின் மீது அதிகமான கொழுப்பு இருக்கிறது யாரோ கூறியதைக் கேட்டு நண்பர்களுடன் மருத்துவமனை வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். எங்களது சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவமனையின் மீது நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம்” எனக் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது நுரையீரலில் நீர் தங்கியிருந்ததாலே இறப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.