இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அதிரடியால் ஒரு நாள் போட்டியின் கேப்டன்சி பதவியில் இருந்து விலக்கப்பட்டு இருந்தார்.
இந்த சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், நீண்ட நாள் சர்ச்சைக்கு விராட் கோலி ஒரு நாள் போட்டியில் விளையாடுவேன் என பதிலளித்து இருந்தார்.
ஆனால், பிசிசிஐ இந்த முடிவுக்கு கங்குலி தான் காரணம் என கூறி வந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி கலந்து கொண்டார். அப்போது கங்குலியிடம் எந்த வீரரின் நடத்தையும் செயல்பாடும் உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்வி எழுப்பபட்டது.
இதற்கு சற்றும் யோசிக்காத கங்குலி, விராட் கோலியின் நடத்தை மற்றும் களத்தில் அவரது செயல்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். மேலும், அதுமட்டுமின்றி விராட் கோலி அதிகமாக சண்டையிடுவார்.,
அதாவது விராட் கோலி அனைவரிடமும், எப்போதும் சண்டை போடுவது தமக்கு பிடிக்காது என்று மறைமுகமாக கங்குலி கூறினார்.
கங்குலி கூறிய இந்தவார்த்தையால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் ரசிகர்களும் விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான வீரர், அணியின் வெற்றிக்காக அவர் கோபப்படுவது நியம்தான் என புகழ்ந்து கங்குலியை திட்டி தீர்க்கின்றனர்.