தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆசிரியர்களுக்கும்,யாழ் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும், வடமாகாணத்தைச் சேர்ந்த தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கும் கியூ ஆர் குறியீடு அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளதாக நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வை.சிவராசா தெரிவித்துள்ளார்.
இதன்போது வாகன இலக்கதகட்டின் இறுதி இலக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஆகஸ்ட் முதலாம் திகதி திங்கட்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே/ 288 முதல் ஜே/ 320 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
ஆகஸ்ட் இரண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே/ 321 தொடக்கம் ஜே/ 347 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், வட மாகாணத்திலுள்ள தவில்- நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும். எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவரும் அனைவரும் தாங்கள் வசிக்கும் கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை அல்லது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஒர் ஆவணத்தையும், தொழிலை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.