திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கும்புறுபிட்டி தெற்கு பழைய ஆர்.டி.எஸ். அலுவலக வீதிக்கு அருகில் சடலமொன்று காணப்பட்டதையடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குச்சவெளி கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா பாலகுமார (46வயது) எனவும் தெரியவருகின்றது.
நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடற்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் இவரின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட உள்ளத்துடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்