பெட்ரோல் டீசல் விலை உயர்வால் இந்தியாவில் மக்கள் பலரும் மின்சார ஸ்கூட்டருக்கு மாறி வருகின்றனர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இருக்கும் மவுசு தற்போது மக்களிடையே அதிகரித்து இருக்கிறது.
அதிலும், Ola Electric Scooter அறிமுகம் செய்யப்பட்ட பிறகுதான் இதற்கு வலுவான வரவேற்பு கிடைத்தது. இதனிடையே, 2021 டிசம்பர் 15 முதல் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு வரத் தொடங்கும் என்று கூறியுள்ளார்.
Ola S1 இன் ஆரம்ப விலை ரூ. 1 லட்சமாகும், S1 Pro ரூ.1.30 லட்சமாகும். இந்த ஓலா (Ola) எலக்ட்ரிக் இந்த ஸ்கூட்டரை S1 மற்றும் S1 ப்ரோ என இரண்டு வகைகளில் அறிமுகம் செய்துள்ளது.
இவற்றுடன் 2.98 kWh பேட்டரி பேக்குடன் S1 வந்துள்ள நிலையில், S1 Pro 3.97 kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. S1-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை இயக்க முடியும் மற்றும் S1 ப்ரோவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை இயக்க முடியும்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாடு முழுவதும் உள்ள 400 நகரங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் மற்றும் டச் பாயின்ட்களில் ஹைப்பர்சார்ஜர்கள் நிறுவப்படும் என்று ஓலா எலக்ட்ரிக் சில காலத்திற்கு முன்பு உறுதியளித்தது