களுத்துறை உட்பட பல பகுதிகளில் இன்று (29) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மொறொந்துடுவ, கட்டுகுருந்த, நாகொட, பொம்புவல மற்றும் பிலமினாவத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.