பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் இலங்கைத் தமிழர்கள் மீது எனக்குத் தனிப் பாசம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.
முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் புகழ் பெற்ற பல பாடல்களைப் பாடியவர் பாடகர் ஸ்ரீநிவாஸ்.
இவர் முக நூலில் கடந்த வாரம் வெளியிட்ட பதிவில் இலங்கை தமிழர்கள் பற்றி குறிப்பிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
அதில் அவர் கூறியதாவது,
‘நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எனக்குத் தந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள்.
அவர்கள் மீது எனக்குத் தனிப்பிரியம் உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.