எரிபொருள் கொள்வனவு செய்வோருக்காக எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி தொடக்கம் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாடிக்கையாளர்களை பதிவு செய்து, வாராந்தம் உத்தரவாத அடிப்படையில் எரிபொருள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.