மனிதர்களின் தோல், உதடுகள் மற்றும் நகங்கள் சாம்பல் நிறத்தில் அல்லது நீல நிறத்தில் காணப்படுவது ஆபத்தானது என அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்
இது குறித்து அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் தெரிவித்திருப்பதாவது, ஒருவருக்கு, தோல், நகங்கள் அல்லது உதடுகள் சாம்பல் நிறத்தில் அல்லது நீல நிறத்தில் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். ஏனெனில் இவ்வாறு சாம்பல் நிறத்தில் இருக்கும் உதடுகள், தோல் அல்லது நகங்கள் ஒமிக்ரான் தொற்றின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
அத்துடன் , தலைவலி, தொண்டையில் கரகரப்பு மற்றும் தலை சுற்றல் உட்பட சுமார் 11 அறிகுறிகள் இத் தொற்றின் அறிகுறிகளாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.