இலங்கையில் பொருளாதார நிலைபேறு மற்றும் மீட்பு வேலைத்திட்டத்திற்காக உலக வங்கியின் அபிவிருத்தி நிதியிடல் வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்திற்கமைய இலங்கை அரசால் சர்வதேச ரீதியிலான பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் தேவையான மறுசீரமைப்புக்களுடன் விரிவான பொருளாதார நிலைபேறு மற்றும் மீட்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்காக அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பொருளாதார கட்டுப்பாடு பரிமாற்றம், வளர்ச்சி மற்றும் போட்டித் தன்மையை அதிகரிப்பதற்கு மற்றும் வறுமைப்பட்டவர்கள் மற்றும் இடர்களுக்கு உள்ளாகியவர்களைப் பாதுகாத்தல் போன்ற பிரதான 3 துறைகளின் அடிப்படையில் உலக வங்கி தனது ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது.
முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஒட்டு மொத்த ஒருங்கிணைப்பு செயன்முறையை ஜனாதிபதி செயலகத்தால் மேற்கொள்வதற்கும், குறித்த நிதியொதுக்கீடு பற்றி உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்குவதற்கும் நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியகொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.