ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் இங்கிலாந்து ஆய்வுகள் ஊக்கமளிக்கும் முடிவுகளை வெளியிட்டுள்ளதாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் மாறுபாடு கொண்ட நோயாளிகள் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் ஆபத்து டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தகவலை வைத்தியர் சந்திம ஜீவந்தர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு நேர்மறை சோதனையின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களுக்கு, தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது 65 சதவீதம் குறைவாக உள்ளது.
எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், கொவிட்-பாதுகாப்பான நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.