கோவிட் வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்தால் மரபணு பகுப்பாய்வு மூலம் கண்டறிய ஆய்வக வசதிகள் இருப்பதாக என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடக மையத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாளவிகே கலந்துகொண்டார். அத்துடன், சுகாதார அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டிருந்தார்.
ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர மற்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதுவரை இருந்த மற்ற நான்கு கோவிட் தொற்றின் விகாரங்களை விட ஒமிக்ரோன் வேகமாக பரவக்கூடும், மேலும் ஒரு நபர் கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் கூட பாதிக்கப்படலாம்” என்று பேராசிரியர் நீலிகா மாளவிகே கூறினார்.